TEACHERS STRIKE ON MONDAY



ஆசிரியர்கள் சங்கம் திங்கட்கிழமை (25) பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக உறுதியாக அறிவித்துள்ளது.


இந்த நிலையில் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் சமூகமளிக்க மாட்டார்கள் என்று இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் உறுதியாக தெரிவித்து உள்ளார்..


இந்தநிலையில் மாணவர்களை நாளைக்கு பாடசாலைக்கு பெற்றோர் அனுப்பலாமா, கூடாதா? என்ற  குழப்பம் நிலவுகிறது..


ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது நாளைக்கு பாடசாலைக்கு எந்த ஆசிரியரும் அதிபரும் சமூகமளிக்க மாட்டார்கள் என்றால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவது எந்த பிரயோசனமும் இல்லை.. இருப்பினும் இந்த விடயத்தில் இன்னும் ஒரு குழப்பம் நிலவுகிறது.


இது  தொடர்பாக கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவலில் நாளை  வழமையான பாடசாலை நாள் எனவும் எல்லா ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமூகம் அளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்..


எனவே மாணவரை பாடசாலைக்கு அனுப்புவதா இல்லையா என்பதை குறித்த பாடசாலையின் அதிபரை தொடர்பு கொண்டு முடிவுக்கு வருவது சிறந்தது...