SRILANKA AIRFORCE ART COMPETITION 2022

வான்படையின் நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சின்

அங்கீகாரத்துடன் நடத்தப்படும்  சித்திரப் போட்டி.

தரம் நான்கு தொடக்கம் தரம் 12 வரை உள்ள மாணவர்கள் மூன்று பிரிவுகளாக பங்குபற்ற முடியும்..

குறித்த போட்டிக்கான பரிசுகள் முறையே.

  • முதல் பரிசு - ஒரு லட்சம்
  • இரண்டாம் பரிசு -50 ஆயிரம் ரூபாய்
  • மூன்றாம் பரிசு - 25,000 ரூபாய்
  • நான்காம் பரிசு -15,000 ரூபாய்
  • ஐந்தாம் பரிசு - 10,000 ரூபாய்

மாவட்டத்தில் திறமையான சித்திரங்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும்.

1.தற்போதுள்ள தொற்று நோய்களை எதிர் கொண்டு ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு விமானப்படையின் அசைக்க முடியாத பங்களிப்பு என்ற கருப்பொருளின் அடிப்படையில் தரம் 4 தொடக்கம் 5 வரை உள்ள மாணவர்கள் சித்திரம் வரைய முடியும்..

2.விஷமில்லாத நாட்டை உருவாக்கவும் நல்லதொரு நாளை வாழவும் விமானப்படையின் அசைக்க முடியாத பங்களிப்பு என்ற கருப்பொருளின் கீழ் தரம் 6 தொடக்கம் 9 வரையுள்ள மாணவர்கள் வரைய முடியும்.

3.பாதையில்லா நாட்டுக்காக அல்லது நாளைக்காக விமானப்படையின் அசைக்க முடியாத பங்களிப்பு என்னும் கருப்பொருளில் தரம் 10 தொடக்கம் 12 வரை உள்ள மாணவர்கள் வரைய முடியும்.

4.A3 அளவுள்ள கடதாசி அல்லது ஏதேனும் மூலப் பொருளை பயன்படுத்த முடியும்


முழுமையாக வரையப்பட்ட சித்திரங்கள் அருகில் உள்ள வான் படை முகாமில் அல்லது பதிவு தபால் மூலம் 2022 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாக கிடைக்கப் பெறும் விதத்தில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வரையப்படும் சித்திரம் பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவான் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சித்திரம் வரையப்பட்ட கடதாசியில் பின்பக்கம் பெயர் தரம் மாவட்டம் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிடவும்..

அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி கீழ்  வருமாறு 

Address

Sri Lanka air force headquarters

Post office box 594,

Colombo 2,srilanka