special notice for A level students 2022

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மண்டபங்களில், இலத்திரனியல் கடிகாரத்தை காட்சிப்படுத்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D தர்மசேன தெரிவிக்கின்றார்.

இதன்படி, பரீட்சை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு ஆசிரியர்கள், தமது கடிகாரத்தில், பரீட்சை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கடிகாரத்திலுள்ள நேரத்தை சரி செய்துக்கொள்ள வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், பரீட்சார்த்திகள், தமது பரீட்சை நிலைய கண்காணிப்பு ஆசிரியர்களின் ஊடாக, தமது கை கடிகாரத்தின் நேரத்தை சரி செய்துக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பரீட்சையின் போது, நேரம் வீணடிக்கப்பட்டதாக எவராலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என அவர் கூறுகின்றார்.

இதேவேளை, உயர்தர பரீட்சைகளுக்கு தேசிய அடையாளஅட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தேசிய அடையாளஅட்டை இல்லாத பட்சத்தில், தமது புகைப்படங்களை பாடசாலை அதிபர் உறுதிப்படுத்தி, ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அந்த உறுதிப்படுத்தி ஆவணங்களை தாம் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்துவதாகவும் அவர் கூறுகின்றார்.