ஆசிரியர்கள் அதிபர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு


நாளை நடைபெற உள்ள பணி பகிஷ்கரிப்பில்

ஆசிரியர் அதிபர் ஆசிரிய ஆலோசகர் மற்றும்

கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்வி நிர்வாக

அதிகாரிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட

அமைப்புகள் ஈடுபடவுள்ளதாக உறுதியாக

அறிவிக்கப்பட்டுள்ளது..


எனினும் நாளை போக்குவரத்து சேவைகள்

இடம் பெறுவதற்கான வாய்ப்புகள்

அதிகமாக காணப்படுகின்றது.. பாடசாலைகள்

நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் மேலும்

நீடிக்கின்றது..


கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் தமது

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பாக

இலங்கையின் கல்வி அமைச்சருக்கு

தெளிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்

அந்த கடிதத்தின் சிங்கள வடிவம் கீழே

கொடுக்கப்பட்டுள்ளது..


அதில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி

நிச்சயமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்

மேலதிகமாக கல்விசாரா ஊழியர்களும் நாளை

பாடசாலை சமூகம் அளிக்க மாட்டார்கள் என

தெரிவிக்கபடுகிறது.


எனினும் பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகள் கல்வி

கற்கும் பாடசாலையின் அதிபரை தொடர்பு கொண்டு

நாளைய பாடசாலை நடவடிக்கைகள் நடைபெறுமா

இல்லையா என்பதை உறுதிப்படுத்திய பின்

பிள்ளைகளை அனுப்புவது தொடர்பான முடிவை

எடுக்கவும்..



ஏற்கனவே ஏப்ரல் 25 ஆம் திகதியும் ஆசிரியர்

மற்றும் அதிபர் சங்கம் வேலை நிறுத்தம்

மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது..


நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும்

அரசியல் நெருக்கடி காரணமாக கல்வித்துறை

வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றமை

குறிப்பிடத்தக்கது.. கொரோனா காரணமாக

இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்று

வந்த நிலையில் மேலும் இப்படியான

பணிப்பகிஷ்கரிப்பு கள் மூலம் மேலும்

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்

பாதிப்படைகின்றன குறிப்பிடத்தக்கது