மாபெரும் கவிதை மற்றும் சிறுகதைப் போட்டி!


2022 மார்ச் மாதம் 8 ஆம் திகதி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை நாடளாவிய ரீதியில் மாபெரும் கவிதை மற்றும் சிறுகதைப் போட்டியை நடாத்த திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில்,

◾15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த போட்டிகளில் பங்கேற்க முடியும்.
◾தங்களது சொந்த படைப்பாகவும் முன்னர் வேறு எதிலும் வெளிவராததாகவும் இருக்க வேண்டும்.
◾"பெண்களை மையக் கருவாகக்" கொண்டு கவிதை மற்றும் சிறுகதை எழுதப்பட வேண்டும்.
◾சிறுகதை 1000 சொற்களுக்குள் அமைய வேண்டும். (A4 பத்து பக்கங்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.)
◾கவிதை 40 அடிகளுக்குள் அமையலாம். (A4 மூன்று பக்கங்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.)
◾தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கவிதை மற்றும் சிறுகதைகளை எழுத முடியும்.
◾தொலைபேசி இலக்கம் அடங்கலாக போட்டியாளரின் விபரங்களை தனித்தாளில் எழுதி அனுப்புவது வரவேற்கத்தக்கது.
◾ ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரமே பங்குபற்றலாம்.

போட்டி இறுதித் திகதி : 2022.02.15

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

அனுப்ப வேண்டிய முகவரி
'மகளிர் தின கவிதைப் போட்டி' அல்லது 'மகளிர் தின சிறுகதைப் போட்டி' என கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் குறிப்பிட்டு,

போட்டி ஒருங்கிணைப்பாளர்,
முஸ்லிம் சேவை,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,
த.பெ.இலக்கம் 574,
கொழும்பு 7.
அல்லது,
slbcmuslimservice@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.