Island wide curfew imposed



 இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 04 திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக நாடு முழுவதும் வார இறுதி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆளும் கட்சிக் குழுவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மக்களின் பாதுகாப்புக்காக முழு நாட்டிலும் வார இறுதி ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை கருதுகிறது. எனினும், அந்தக் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.   

இந்தநிலையிலேயே சற்றுமுன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி