*நாளைய தினம் பாடசாலைகள் நடைபெறுமா? பலதரப்பட்ட மாணவர்களின் வினாக்களுக்கான விடையும் தெளிவு படுத்தலும்.*





நாடளாவிய ரீதியில் இன்று (20) முதல் ஒருவார காலத்திற்கு ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் இணைந்து இவ்வாறு ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் சார்பில் சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.



நாடளாவிய ரீதியில் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கி பொது மக்களின் பங்களிப்புடன் இவ்வாறு  எதிர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியை மையப்படுத்தியதாக நாளைய தினம் பாடசாலைகள் நடைபெறாது என்ற ஓர் செய்தி பரவலாக மாணவர்கள் மத்தியில்  பகிரப் படுவதாக தெரிவிக்கப்படுகின்றது .


இதுதொடர்பாக பல மாணவர்கள் எம்மை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை தெளிவு படுத்துமாறு கேட்டிருந்தார்கள்.


அவர்களுக்கான தெளிவுபடுத்தல் ஆக இந்தப் பதிவை பதிவிடுகின்றோம்.



முதலாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக கடந்த 18 ம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகி இருந்தன.



இந்த நிலையில் பாடசாலைகள் மூடப்படுவது குறித்து இலங்கை கல்வி அமைச்சினால் இதுவரை எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் வெளியாகவில்லை.


ஆகவே நாளையதினம் பாடசாலைகள் நடைபெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


 அவ்வாறான உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளிவரும் பட்சத்தில் முந்திக்கொண்டு நாம் அறியத் தருவோம்.


போலியான செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம்.