ESSAY COMPETITION FOR SCHOOL STUDENTS



பாடசாலை மாணவ ,மாணவிகளுக்காக அகில இலங்கை ரீதியில் நடத்தப்படும் கட்டுரைப்போட்டி 2022 


சர்வதேச சிங்க சமாஜங்களின் இணையம் - பிராந்தியம் 306 ஏ 02. வருடந்தோறும் நடாத்தும் போதைவஸ்து. சம்பந்தமான நாடளாவியரீதியான கட்டுரைப் போட்டியை இந்த வருடமும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 28வது வருடமாக இடம்பெறும் இந்த போட்டியை வழமைபோல் தெகிவளை வடக்கு சிங்க சமாஜம் பொறுப்பேற்றுள்ளது. இம்முறையும் இப்போட்டியினை கொழும்பு மிட்- சிற்றி றோட்டறி கழகமும் இணைந்து நடாத்துவது விசேட அம்சமாகும். இதற்கான அனுசரணையை ஹில்ஸ் கெலிவிலே றோட்டறி கழகம் ( Rotary Club of Hills – Kellyville. NSW Dist 9685 ) வழங்குவது குறிப்பிடத்தக்கது.


(1) இப்போட்டியில் 15 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட சகல பாடசாலை மாணவ ,மாணவிகளும் பங்கேற்கலாம்.


(2) ஆக்கங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.


(3) போட்டிக்கான தலைப்பு: “போதைப் பொருள் பாவனையும் அதன் பாரிய பாதிப்புகளும்" (4) மூம்மொழிகளிலும் தனித்தனியாக முதல் 5 இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு


முறையே ரூ:12.500/=, 10.000/, 7.500/=, 5000/-. 2.500/- எனப் பணப் பரிசில்களும்

அழகிய வெற்றிச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.


கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்


(8) கட்டுரைகள் A4 அளவு தாளில் 5 பக்கங்களுக்கு மேற்படாமல். இருக்க வேண்டும்


தட்டச்சு பிரதிகளாயின் 4 பக்கங்கள்) தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்படல் வேண்டும்.


(b) அந்துடன் அவை போட்டியாளரின் சொந்த ஆக்கம் எனவும், அவருடைய பெயர். பிறந்த திகதி வகுப்பு ஆகிய விபரங்களும் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.


(c) பங்கு பற்றும் மாணவ மாணவிகள் தங்களது பெயரையும் பாடசாலையின் பெயரையும் சொந்த விலாசத்தையும் ஆங்கிலத்தில் தெளிவாக எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்

படுகின்றனர். அத்துடன் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிடல் நன்று. 


(d) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. இது சம்பந்தமாக எதுவித கடிதத் தொடர்பும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 


(e) ஆக்கங்கள் திருப்பி அனுப்பப்படமாட்டாது.


கட்டுரைகள் யாவும்


பிராந்திய இணைப்பாளர். சர்வதேச சிங்க சமாஜங்களின் இணையம் - பிராந்தியம் 306A2, 12/3.பிரான்சிஸ் வீதி, வெள்ளவத்தை. கொழும்பு - 06


எனும் முகவரிக்கு 2022 ஜனவரி 31 ஆந் திகதிக்கு ( 2022.01.310 முன்பு கிடைக்ககூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.


District coordinator

(Prevention of Drug Abuse and HIV/AIDS) Lions Clubs International - District 306A2, 12/3 Frances Road, Wellawatte, Colombo-06.